பா.ஜ.க-வில் கூட்டாக இணைந்த கமல்நாத் மகன்
மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல்நாத் தனது மகன் நகுல்நாத் மற்றும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க) சேரப்போவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியில் இருந்து கமல்நாத் 9 முறை எம்.பி.யாக இருந்தவர். மேலும் அந்தப் பகுதியில் அதிக செல்வாக்கு செலுத்துபவராக உள்ளார். தற்போது இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கமல்நாத் மகன் நகுல்நாத் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கமல்நாத் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் கட்சியை விட்டு வெளியேறக்கூடும் என்ற வதந்திகள் சில காலமாகவே இருந்து வந்தன. மேலும், வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தலுக்கு கமல்நாத்தை காங்கிரஸ் பரிந்துரைக்காததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்தது.
இந்த நிலையில் தான், கமல்நாத் தனது மகன் நகுல்நாத் மற்றும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க) சேரப்போவதாக வெளியான தகவல் வெளியாகியது. இதனையடுத்து, சனிக்கிழமையில் அவரது திடீர் டெல்லி பயணம் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. கமல்நாத்தும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க-வில் சேருவது தொடர்பான வதந்திகளை நிராகரித்தார்கள்.
பா.ஜ.க-வுடன் கைகோர்த்த காங்., தலைவர்கள்
காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், இதற்கு ஒரு நாள் கழித்து, அவரது கோட்டையான சிந்த்வாராவைச் சேர்ந்த பல காங்கிரஸ் தலைவர்கள் நேற்று புதன்கிழமை பா.ஜ.க-வில் இணைந்துள்னர்.
1,500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜ.க-வில் இணைந்த நிகழ்ச்சியில் முதல்வர் மோகன் யாதவ் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சிந்த்வாரா எம்.பி-யான கமல்நாத் மகன் நகுல்நாத் அவரது தொகுதிக்கு வரவேற்றார். முதல்வர் மோகன் யாதவ் மாவட்டத்திற்கும் சிந்த்வாரா மருத்துவக் கல்லூரிக்கும் விரைவில் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பான தனது எக்ஸ் வலைதள பதிவில் நகுல்நாத், பா.ஜ.க அரசாங்கம் சிந்த்வாரா பல்கலைக்கழகத்தில் வசதிகளை மேம்படுத்தும் என்றும், அதிக மழையால் பயிர்களை இழந்த மாவட்ட விவசாயிகளுக்கு உதவும் என்றும் நம்புவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், கமல்நாத் மற்றும் நகுல் ஆகியோர் காங்கிரஸை விட்டு வெளியேறத் தயாராகிவிட்டனர் என்ற வதந்திகள் பரவிய சில நாட்களுக்குப் பிறகு, உள்ளூர் பா.ஜ.க தலைவர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதல்வர் மோகன் யாதவ் வருகை தந்துள்ளது மிகவும் உன்னிப்பாகப் பார்க்கப்படுகிறது. கமல்நாத் வதந்திகளை மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது ஒன்றாக உள்ளது.
நேற்று புதன்கிழமை பா.ஜ.க-வில் இணைந்த காங்கிரஸ் தலைவர்களில் அதன் மாநிலப் பிரிவு பொதுச் செயலாளர் அஜய் சிங் அஜ்ஜு தாக்குரும் அடங்குவர். அவருடன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பிரதீப் ஜூனாங்கர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பல உறுப்பினர்களும் இணைந்துள்ளனர்.
சிந்த்வாராவில் உள்ள பா.ஜ.க தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இணைந்ததால், “சிந்த்வாரா மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து நகராட்சிகளும் பா.ஜ.க-வின் கட்டுப்பாட்டில் உள்ளன” என்று கூறினார். பா.ஜ.க மாவட்டத் தலைவர் விவேக் பண்டி சாஹு தான் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பா.ஜ.க-வில் இணைய முக்கியப் பங்காற்றியவர் என்றும் கூறுகிறார்கள்.