ரூ.48,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் மோடி
பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் செல்கிறார். அங்கு ரயில்வே, எரிசக்தி, சுகாதாரம், இணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் ரூபாய் 48 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
பொதுக்கூட்டம்:
இன்று காலை 10.45 மணியளவில் அகமதாபாத் வரும் பிரதமர் மோடி, குஜராத் பால் கூட்டுறவு அமைப்பின் பொன்விழாவில் பங்கேற்கிறார். அதன்பிறகு 12.45 மணிக்கு மஹேசனா செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள மகாதேவ் கோவிலில் பூஜைகள் மற்றும் தரிசனம் மேற்கொள்கிறார். நண்பகல் 1 மணியளவில் மஹேசனாவின் தர்பா பகுதியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். ரூ.8,350 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் மாலை 4.15 மணியளவில் நவ்சாரி செல்லும் பிரதமர் மோடி, முடிவு பெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மாலை 6.15 மணியளவில் கக்ரபார் அணு மின் நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கு முடிவு பெற்ற சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
ரூ.48 ஆயிரம் கோடி: குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் பொன்விழா அகமதாபத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உள்ளார். அதேபோல், ரயில்வே, எரிசக்தி, சுகாதாரம், இணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மொத்தம் ரூபாய் 48 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அகமதாபாத் நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி அருகே உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.