மும்பைக்கு 10 மணி நேரத்தில் செல்லலாம்!
சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சுமார் இரண்டு மணி நேரத்தில் சென்று விடலாம்.
ரயிலில் பயணித்தால், 23 மணி நேரம் ஆகும்.
இந்த பயண நேரத்தை குறைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னை- மும்பை இடையேயன ரயில் பாதையை தரம் உயர்த்தியும், சில இடங்களில் புது ரயில் பாதைகள் அமைத்தும், பயண நேரத்தை குறைக்கும் நடவடிக்கையில் ரயில்வே இறங்கியுள்ளது.
மணிக்கு நூறு மைல் வேகத்தில் ரயில் செல்லும் வகையில் பாதை தரம் உயர்த்தப்படும்.
இதனை செய்து முடிக்க 6 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இதே போல் சென்னை- டெல்லி ரயில் பாதையை தரம் உயர்த்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பாதை தரம் உயர்த்தப்பட்டால், டெல்லிக்கு 18 மணி நேரத்தில் சென்று விடலாம்.
S முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.