பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை
சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து மேயர் பிரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ், 2 செட் சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்றும் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.