உலக சாதனை நிகழ்ச்சி!

சென்னையில் செப்டம்பர் 3-ல்
பெண்களுக்கான உலக சாதனை நிகழ்ச்சி!

சென்னை- ஆகஸ்ட் 24.
மறுமலர்ச்சி பெண்கள் நல அமைப்பு மற்றும் ஷைன் குழந்தைகள் மற்றும் பெண்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும்,
கலை விழா 2023 மற்றும் பெண்களுக்கான உலக சாதனைக்கான நிகழ்ச்சி சென்னை ஆலந்தூரில் உள்ள
ஏ.ஜே.எஸ் நிதி மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற செப்டம்பர் 3ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது, அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் – உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் – ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். என்ற மூன்று உண்மையினை உணர்த்தும்,
சிலப்பதிகாரம் என்ற காப்பியம் ஓவிய கதையாக வடிவமைத்து, மேலும் இதை 500 பெண்கள் இணைந்து சித்திர தையல் கலை (ஆரி எம்ப்ராய்டரி ) மூலம் ஓவியம் வரைந்து ஒரு உலக சாதனையாக படைக்க உள்ளனர்.
இதில் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பெண்களுக்கான உலக சாதனை நிகழ்ச்சி என வெற்றி பெறும் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கி கௌரவிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்துரை வழங்குபவர் திரைப்பட இயக்குனர் சிரஞ்சீவி அனீஸ், வெற்றிபெரும் மாணவர்களுக்கு பரிசு வழங்குபவர் அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் திருமதி லட்சுமி ஜெயக்குமார். உலக சாதனை நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பவர் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில பொதுச் செயலாளர்
லயன் டாக்டர் பி. வெங்கடேசன்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மறுமலர்ச்சி பெண்கள் நல அமைப்பு நிறுவனத் தலைவி திருமதி.சண்முக ப்ரியா, ஷைன் குழந்தைகள் மற்றும் பெண்கள் அறக்கட்டளை நிறுவனர் திருமதி.ஜெயந்தி ஆகியோர்
செய்து வருகிறார்.

திருமதி சண்முக ப்ரியா
திருமதி ஜெயந்தி

Leave a Reply

Your email address will not be published.