மே-12 முதல் இராவண கோட்டம்!
இராவண கோட்டம்
கண்ணன் ரவி குரூப்ஸ் என்ற புதிய திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்திற்கு இராவணக் கோட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அவருடன் இணைந்து கயல் ஆனந்தி நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரபு, இளவரசு, மற்றும்
பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் ஒரு கிராமத்துப் பின்னணியை அப்படியே படம் பிடித்து தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி. பாடல்களை கார்த்திக் நேதா எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
யாசின் நிசார், வந்தனா சீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர். இப்படத்திற்கு விக்ரம் சுகுமாரன்
கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
கண்ணன் ரவி குரூப்ஸ் என்ற திரைப்பட நிறுவனம் சார்பாக துபாய் கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.
மே மாதம் 12ஆம் தேதியன்று உலகமெங்கும் இத்திரைப்படம் வெளியாகிறது.