அம்பேத்கர் 132 வது பிறந்தநாள்
மணப்பாறை பெரியார் சிலை அருகே புரட்சியாளர் அம்பேத்கார் 132 வது பிறந்தநாளில் டாக்டர் அம்பேத்கார் திருஉருவ படத்திற்கு விசிக நகர செயலாளர் வடிவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
மணப்பாறையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர ஒன்றிய சார்பாக மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாள் விழா உலகெங்கும் வெகு விமர்சனமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை பெரியார் சிலை ரவுண்டான அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர ஒன்றியம் சார்பாக நகரச் செயலாளர் வடிவேல் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மாவட்ட பொருளாளர் மதனகோபால்
ஒன்றிய செயலாளர்
கா அன்பரசன்,
தொகுதி செயலாளர்
சக்தி (எ) ஆற்றல் அரசு,
தொகுதி துணை செயலாளர் ராஜேந்திரன்,
ஒன்றிய துணைச் செயலாளர் பிரபாகரன்,
தொ.வி மு பழ. குழந்தை அரசு, ஒன்றிய செயலாளர் மணிவேல்
ஆகியோர் ஆகியோர் மலர் தூவி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் த இந்திரஜித்
காங்கிரஸ் கட்சியின் மணப்பாறை வட்டாரத் தலைவர் சத்தியசீலன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஜனசக்தி உசேன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெலிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் பாலு ஆகியோர் கலந்து கொண்டு
மலர் தூவி மாலை அணிவித்து கொண்டாடினார்கள்
நகரத் துணைச் செயலாளர் தர்மர் நன்றி உரை கூறினார்.
இதே போல் மணப்பாறை கோவில்பட்டி சாலை ஜீவா தெருவில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பேரவை நிறுவனத் தலைவர் ஆதி பழனியப்பன் தலைமையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா மலர் தூவி மாலை அணிவித்து கொண்டாடினார்கள்
அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் தொல் திருமாவளவன் ஆணைக்கிணங்க திருச்சியில் நடைபெற்ற நீல சட்டை பேரணிக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்
பி பாலு செய்தியாளர் மணப்பாறை