செய்யூர் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மற்றும் அனைத்து மகளிர் சுய உதவிக் குழு சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
செய்யூர் ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது சிறப்பு விருந்தினராக அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் லட்சுமி ஜெயக்குமார் மற்றும் மகளிர்கள் சார்பாக பலரும் கலந்து கொண்டனர்.
செய்யூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மகளிர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று,
பெண்ணின் மகத்துவத்தை எடுத்துரைத்தனர்.
போற்றுவோம்!
போற்றுவோம்!!
பெண்ணினம் போற்றுவோம்..
படைப்போம்!
படைப்போம்!!
புதுயுகம் படைப்போம்…
சாதனை பெண்ணாய் மகத்துவம் படைப்போம்…
உரிமை கொண்டு உலகை வெல்வோம்…
எழுச்சி கொண்டு புரட்சி செய்வோம்…
போன்ற வாசகங்களுடன்சிங்க பெண்ணே, சிங்க பெண்ணே, புறப்படு விடியட்டும்…
சிங்க பெண்ணே, சிங்க பெண்ணே, புறப்படு விடியட்டும்…
பயமில்ல, பயமில்ல, பயமென்னது இல்லயே..
பயமில்ல, பயமில்ல, பயமென்னது இல்லயே..
துணிந்து நின்ற பெண்ணுக்கு,
பயமேதும் இல்லையே…
துணிந்து நின்ற பெண்ணுக்கு,
பயமேதும் இல்லையே…
என்று கோஷங்களும் எழுப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் செய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


