முதல்வர் பிறந்த நாள்
இந்தியாவின் பழம்பெரும் அரசியல் வித்தகர் அமரர் கலைஞர் கருணாநிதியின் அரசியல் வாரிசும், தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சருமான திரு
மு. க. ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று. (01.03.2022)
மு.க.ஸ்டேலின் எனும் முத்துவேல் கருணாநிதி ஸ்டேலின் மார்ச் 1, 1953 இல் பிறந்தார்.இவர் தமிழ்நாட்டின் பழம்பெரும் அரசியல் வித்தகரான கலைஞர் கருணாநிதியின் மகனும்,தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.
இவரின் இருப்பிடம்25/9, சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை,
தமிழ்நாடு.
சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படித்தவர் ஸ்டேலின். சிறுபராயத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்.தந்தையைப் போல் கட்சிக்கொள்கைளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நீண்ட காலம் உழைத்தவர் . இதனால் “தளபதி”என அனைவராலும் அழைக்கப்பட்டவர் .ஸ்டேலின் தமிழகத்தின்
துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார்.1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37-ஆவது மேயராகவும், 2009 முதல் 2011 வரை தமிழகத்தின் முதல் துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்தார். ஒகஸ்ட் 28, 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார்.இந்தியன் எக்ஸ்பிரஸ்
நிறுவனத்தால் 2019-ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் மு.க. ஸ்டாலின் 30-ஆவதாக இடம் பெற்றார்.இவர் 1953-ஆம் ஆண்டு கருணாநிதி – தயாளு அம்மாள் ஆகியோரின் தம்பதிக்கு மூன்றாவது மகனாகச் சென்னையில் பிறந்தார். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டேலின் மறைந்த 4 நாட்களுக்குப் பிறகு பிறந்ததால் அவரது நினைவாகத் தம் மகனுக்கு ஸ்டேலின எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி.
ஸ்டேலின் சென்னை கிறிஸ்டியன் கல்லூரி மேல் நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார், 1973-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றுப் பட்டம் பெற்றார். ஒகஸ்ட் 1, 2009 அன்று அண்ணா பல்கலைக்கழகம் மு.க. ஸ்டாலினுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கியது.
மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 25, 1975-இல் துர்கா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் என்ற மகனும் செந்தாமரை என்ற மகளும் உள்ளனர்.
ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிர்வாகம் மறுத்ததாக இவர் தெரிவித்தார்.
இதனால் சென்னை சேத்துப்பட்டு கிறித்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.
தந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டேலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தாலும் தி.மு.க. உறுப்பினரானார். கலைஞர் கருணாநிதி வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே இவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டேலின் பள்ளி மாணவராகப் படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம்
இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஆரம்பித்து அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்குப் பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையும் செய்து வந்தார்.
இதன் பின் படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980 இல் மதுரை
ஜான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது .1980-இல் திருச்சியிலே 2-ஆம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஓர் அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க. ஸ்டாலின் ஓர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புக்குழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியைக் கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.ஸ்டேலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காகச் சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975-இல் மிசா சட்டத்தின் கீழ் சிறை சென்றார். இதனை எதிர்கட்சிகள் மறுத்துப் பேசிய விமர்சனங்களும் உள்ளன.
திமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காகத் திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.ஸ்டேலின்ஆரம்பத்தில்
இருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொகுதியை அண்ணா தி.மு.க கட்சியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984-ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார்.அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார் ஸ்டேலின்.இளைஞர் அணியின் செயலாளராகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரைச் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி
வழங்கினார். ஸ்டேலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.ஆனால் முதன்முறையாக
1996-ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டேலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்.
2001-ஆம் ஆண்டு 2-ஆவது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2002-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர்
ஜெ. ஜெயலலிதா சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்தச் சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்.மு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.கருணாநிதி, ஐந்தாவது
முறையாகத் முதல்வர் பொறுப்பை ஏற்க, முதன்முறையாக மு.க.ஸ்டேலின்
தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார்.தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி,2009ல் முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார், அது முதல் அவருக்கு சக்கர நாற்காலி தரப்பட்டது. அவரது உடல்நிலை காரணமாக அவரது துறைகளில் இருந்து பல துறைகளில் கவனம் செலுத்த முடியவில்லை, எனவே இவரது மகனான ஸ்டேலினுக்கு சில அமைச்சுத்துறைகள் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்தார்,இவர் அமைச்சரவையில் உள்ளூர் நிர்வாக அமைச்சராக பதவி வகித்தார். இதன் விளைவாக தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.இவர் அந்த பதவியில் 29 மே 2009 முதல் 15 மே 2011 வரை பதவி வகித்தார்.2016 சட்டமன்றத் தேர்தலின் போது, ஸ்டேலின் இளைஞர்களைக் கவரும் விதமாக “நமக்கு நாமே” என்ற தலைப்பில் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்திற்குச் சென்றார். அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஸ்டேலின் கொளத்தூர்
தொகுதியில் போட்டியிட்டு பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2017-ஆம் ஆண்டில், ஸ்டேலின் மற்றொருமுறை “நமக்கு நாமே” சுற்றுப்பயணத்திற்குச் சென்றார். பின்னர் 2018-ஆம் ஆண்டில், அவரின் தந்தை
கருணாநிதி மறைவுக்கு பின், ஸ்டேலின்
திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
மு.க. ஸ்டாலின் தேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கீழ் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி, மாநிலத்தில் 2019 பொதுத் தேர்தலில் கூட்டணிக்குத் தலைமை தாங்கினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 நாடாளுமன்ற இடங்களில் 39 இடங்களையும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 2021-இல் 12 இடங்களையும் 52% வாக்குகளைப் பெற்று வென்றது. திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் இவர் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக மு.க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். தேர்தல் முடிவுகளில் இக்கூட்டணி 159 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து மே 7-ஆம் நாளன்று மு.க. ஸ்டேலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.தந்தையைப் போல் கலைத்துறையிலும் பெரும் ஈடுபாடு கொண்டவர் ஸ்டேலின். “ஓரே ரத்தம்”,
“மக்கள் ஆணையிட்டால்” என்ற படங்களிலும், முரசே முழங்கு,திண்டுக்கல் தீர்ப்பு,
நாளை நமதே போன்ற நாடகங்களிலும்,
குறிஞ்சி மலர்,சூர்யா ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர் ஸ்டேலின்.
சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராரட்சி தேர்தலில் இவர் தலைமையிலான கூட்டணிக்கட்சிகள் தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் வெற்றி பெற்றது. இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் பாராட்டும் வண்ணம் இவரின் ஆட்சி தமிழகத்தில் அமைத்திருப்பதாக ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.கொரோனோ காலத்தில் இவரின் நடவடிக்கைகள் மக்களை திருப்தி படுத்தும் வகையில் அமைந்தது.இவரின் மகன் உதயநிதியும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.அரசியலில் தந்தை கலைஞர் கருணாநிதியுடன் இணைந்து பல அனுதாபங்கள் பெற்ற திரு. ஸ்டேலின் அவர்களின் எதிர்கால அரசியல் களம் பிரகாசமாக அமைய நல்வாழ்த்துகள்.
புரையோடிப் போயுள்ள இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு இவர் ஆட்சியிலேயே ஓர்
சிறந்த தீர்வு கிடைக்கும் என பலரின் கனவாகவுள்ளது.
ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை .