குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை குஜராத் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ராவுக்குப் பிந்தைய வகுப்புவாத கலவரம் தொடர்பாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை, சாட்சியங்கள் இல்லாததால் குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்ட நீதிமன்றம் விடுவித்துள்ளது.