வின்ஸ்டன் சர்ச்சிலின் 58 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
பிரிட்டிஷ் ராஜ்ஜிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானோராக கருதப்படும் வின்ஸ்டன் சர்ச்சிலின் 58 ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும்….!சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் தோற்றம்:நவம்பர் 30.1874 .மறைவு: ஜனவரி 24.1965…அகவை 91என்ற முழுப்பெயர் கொண்ட இவரின் சிறப்புப் பட்டயக்கள்:ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம் (Order of Garter-OG), காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம் (Order of Companions Honour-CH), இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம் (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), கனடா அரசியாரின் ஆலோசகர் (Queen’s Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார். இவர் பிரித்தானிய அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராவார். ஐக்கிய இராச்சியத்தின் 1940 முதல் 1945 வரை மீண்டும் 1951 முதல் 1955 வரை பிரதமராக பதவி வகித்த சர்ச்சில் இரண்டாம் உலகப்போரில் ஐக்கிய இராச்சியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராக கருதப்படுகிறார்.வாழ்க்கை துணைவர்:கிளமன்டைன் சர்ச்சில்.பிள்ளைகள்:டயானா சர்ச்சில்ரான்டல்ப் சர்ச்சில்.சர்ச்சில் மிகச்சிறந்த பேச்சாளர், பிரித்தானிய இராணுவத்தின் அதிகாரி, வரலாற்றியலாளர், அவரது எழுத்திற்காக நோபல் பரிசு பெற்றவர், வரைவாளர் போன்ற சிறப்புப் பெருமைகளையும் கொண்டவர். போர் தந்திரமிக்கவர் என்பதை இராணுவத்தில் பணிபுரிந்தபோதே நிருபித்தவர். இந்தியா,சூடான், இரண்டாம் போயர் போர்களில் களம் கண்டவர். மேற்கு முன்னணியருடன் முதலாம் உலகப்போரில் பிரித்தானியா போர் புரிந்தபோது ரோயல் ஸ்கூட் பியூசிலர்ஸ் போரின் 6 வது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கி அதன் வெற்றியில் பங்கு கொண்டார். தீடீரென தோன்றிய இரண்டாம் உலகப்போரின் போது முதல் கோமகனின் கப்பற்படைத் தலைவராக நிவிலி சாம்பர்லின் பதவி விலகலைத் தொடர்ந்து மே 10., 1940 அன்று நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரதமாராகப் பதவியேற்று பிரித்தானிய இராணுவத்தினரை அச்சு சக்திகளுக்கு எதிராகப் பயன்படுத்தியதன் மூலம் வெற்றியை நிலைநாட்டினார்.1945 ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். மீண்டும் 1951 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார் 1955 ல் ஒய்வு பெறும் வரை பதவியில் தொடர்ந்தார். இரண்டாம் ராணி எலிசபெத் ஆல் லண்டன் கோமகன் (Duke of London) பதவி வழங்க விருப்பம் தெரிவித்தார் ஆனால் சர்ச்சிலின் மகன் ராண்டால்ப் சர்ச்சில்- சர்ச்சிலின் மறைவுக்குப் பின் மரபுரிமை பெறுவார் என்று எழுந்த எதிர்ப்பலையால் அம்முயற்சி கைவிடப்பட்டது. ராணி சர்ச்சிலின் இறப்பை ராஜ்ஜியத்தின் துயரமாக அனுசரிக்க ஆணையிட்டு சர்ச்சிலுக்கு இறுதி மரியாதை செய்தார்.இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரே பிரித்தானியப் பிரதமர் இவரே.அதுமட்டுமன்றி ஐக்கிய அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமை வழங்கப்பட்ட இரண்டாவது நபரும் இவரே. ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.