எதிர்காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படப்போவது திண்ணம்
உள்ளூராட்சி தேர்தலுக்கு செலவிடப்படும் பாரிய தொகையினால் எதிர்காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படப்போவது திண்ணம்.இத்தேர்தலுக்குப்பின் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்,மருந்துகள்,எரிவாயு,எரிபொருள் போன்றன கண்டிப்பாக விலையேற்றம் அடையும்.நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இத்தேர்தலானது அவசியம் தானா என பொதுமக்களும்,புத்திஜீவிகளும் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.உரிய காலத்தில் தேர்தல் நடாத்தப்பட்டு நாட்டின் ஜனநாயக உரிமை மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் எவருக்கும் எவ்வித மாற்றுக் கருத்து இல்லையென்ற போதிலும்,கொரானொவுக்கு முன் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களுக்கும்,எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கும்பொருளாதார ரீதியில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.நம் தேசம் தற்போது எதிர்கொண்டுள்ள சூழலில் தேர்தலை நடாத்தினால் இதனால் ஏற்படும் பொருளாதாரபக்க விளைவுகள் யாவும் நாட்டு மக்களின் தலைகளில் சுமைகளாக வந்து விடியும் என்பது மட்டும் உறுதி.நாட்டின் வருமானம் 100 எனின் செலவு 300 ஆகிவிட்ட நிலையில்,இத்தேர்தலுக்காக செலவிடப்படும் தொகை 12 பில்லியன் ரூபா என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது.தேர்தலுக்குப் பின் நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்.நாடு முழுவதிலுமுள்ள 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8365 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க இத்தேர்தல் நடைபெறப்போகின்றது.இவற்றில் 24 மாநகர சபைகள்,41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகளும் உள்ளடங்குகின்றன.எனினும் இத்தேர்லில் வாக்காளர்கள் மோசமாக அரசியல் செய்தவர்களுக்கு தக்க பாடம் வழங்கும் விதத்தில் பெறு பேறுகளை வழங்குவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.இனவாத சொற்பொழிவுகள் யாவும் இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எடுபடாது.எப்படிப்பட்ட ஜனரஞ்சக அரசியல் வாதியானாலும் இம்முறை நாவை சற்று அடக்கியே மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். ஒட்டு மொத்த இலங்கை மக்களும் அரசியல் தலைமைகள் மீது கடும் வெறுப்பை சம்பாதித்த நிலையிலே இத் தேர்தல் நடைபெறப் போகின்றது. ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை.