காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்,
தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான செல்வா தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஜெ.ரமேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.
இதில் மணப்பாறை,வையம்பட்டி,மருங்காபுரி பகுதிகளைச் சேர்ந்த வட்டார தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பி.பாலு மணப்பாறை செய்தியாளர்