கே. ஜே. யேசுதாஸ் அவர்களின் 83 வது அகவை இன்று..
சங்கீத சாம்ராட்,இசை வேந்தன்,காந்தக்குரலோன் கே. ஜே. யேசுதாஸ் அவர்களின் 83 வது அகவை இன்று….. கட்டசேரி ஜோஸஃப் ஜேசுதாஸ் என்பதே கே.ஜே.ஜேசுதாஸ் என்ற பெயரின் அர்த்தம். 10.01 1940 இல் கே.ஜே.யேசுதாஸ் பிறந்தார். இவர் இந்திய கர்நாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். இவர் தமது 50 ஆண்டு கால திரைவாழ்வில்மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு,வங்காள மொழி,குஜராத்தி,ஒரியா,மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய் மொழி, ரஷ்சிய மொழி,அராபிய மொழி,லத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார்.சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் எட்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். திரையிசைத் தவிர,கர்நாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவரை “கான கந்தர்வன்” என்று இவரது இரசிகர்கள் அழைக்கின்றனர்.இவர் கேரள மாநில கொச்சியில் பிறந்தவர்.பிஃலிம்பேர் விருதுகளை ஐந்து முறை பெற்றவர். சிறந்த பின்னணிப் பாடகருக்கான மாநில விருது கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் அரசுகள் கொடுத்த விருதுகளை நாற்பத்து மூன்று முறை பெற்றவர். இவர் கலைகளுக்கு செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசால் இவருக்கு 1975 இல் பத்மஸ்ரீ , 2002 இல் பத்ம பூஷண், மற்றும் 2017 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் (இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருது) வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் இசைத் துறையில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக சிஎன்என்-ஐபிஎன் சிறந்த சாதனை விருதை ஜேசுதாசுக்கு வழங்கி கௌரவித்தது. 2006 ஆம் ஆண்டில், சென்னையின் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளில் 16 திரைப்படப் பாடல்களைப் பாடினார். இந்த பாராட்டுகள் மற்றும் அங்கீகாரங்களின் விளைவாக, இவர் இந்திய இசை வரலாற்றில் மிகச் சிறந்த பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.யேசுதாஸ் லத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் ஒகஸ்டீன் ஜோஸஃப்புக்கும்,எலைஸ் குட்டிக்கும் மகனாக கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் பிறந்தார். அவரது தந்தை அனைவரும் அறிந்த மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். துவக்கத்தில் இசைப்பயிற்சியை அவரிடமே கற்ற ஜேசுதாஸ் பின்னர் திருப்புனித்துறையில் இருந்த இசை அக்கடாமியில் தனது இசைக் கல்வியைத் தொடர்ந்தார். சற்றுகாலம் வேச்சூர் ஹரிகர சுப்பிரமணிய அய்யரிடம் பயின்ற பின்னர் செம்பை வைத்தியநாத பாகவதரிடம் மேல்நிலைப் பயிற்சி பெற்றார். ஹிந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றார்.ஜேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் “கல்படுகள்” என்ற மலையாளத் திரைப்படத்தில் துவங்கினார். தமிழ்த் திரைப்படங்களில் வீணைஎஸ்.பாலச்சந்தரின் “பொம்மை” படத்தில் அறிமுகமாகி முதன்முதலாக “நீயும் பொம்மை, நானும் பொம்மை” என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது.1970களில் ஹிந்தித் திரைப் படங்களில் பாடத்துவங்கினார். முதல் ஹிந்தி மொழிப்பாடல் “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்ற திரைப்படத்திற்கு பாடினார். ஆயினும் அவர் பாடி வெளிவந்த முதல் ஹிந்திப் படமாக “சோடிசி பாத்” அமைந்தது. இவற்றைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.1961 நவம்பர் 14 அன்று ஜேசுதாஸ் ஜாதி பேதம் மாதா த்வேஷம் என்ற தனது பிரபலமான முதல் பாடலைஎம். பி. ஸ்ரீனிவாசன் இசையில் பதிவு செய்தார். திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்க இவர் பாடிய நான்கு வரிகளையும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறார், ஸ்ரீ நாராயண குரு, கேரளாவின் மிகவும் மரியாதைக்குரிய துறவி-கவிஞர்-சமூக சீர்திருத்தவாதி. ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கை மற்றும் காலங்களில் சமூக சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட “கல்படுகல்” (1962) படம் . அந்தக் காலத்து பிரபல பாடகர்களான பி. லீலா, சாந்தா பி. நாயர், கே.பி. உதயபானு, எஸ்.ஜானகி போன்றவர்களுடனும், பி.பாஸ்கரன் மற்றும் தம்பியாத் போன்ற பாடலாசிரியர்களுடனும் அவர் தொடர்பு கொண்டார். இந்த படத்திற்காக கவிஞர் குமரன் ஆசனின் வரிகளை அவர் பாடினார் . ஆரம்ப ஆண்டுகள் பிறகு அவர் பெரும்பாலானோர் அந்நேரத்தில் நிலைநாட்டப்பட்ட இசை இயக்குனர்களான, எம்பி ஸ்ரீநிவாசன் , ஜி தேவராஜன் , வி தட்சிணாமூர்த்தி , Br லட்சுமணன் , எம் .பாபுராஜ் மற்றும் பலரால் தேடப்பட்ட பாடகரானார்.இவ்வாறு மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களை உள்ளடக்கிய பின்னணி பாடலில் அவரது வாழ்க்கையைத் தொடங்கினார் . “பர்யா” என்ற மலையாள படத்தின் ஜி. தேவராஜனின் இசை மற்றும் வயலார் ராமவர்மாவின் பாடலில் முதல் பெரிய வெற்றியைப் பெற்றார் . 1967 ஆம் ஆண்டில், பி.வேணு இயக்கிய “உதயோகஸ்தா”படத்திற்காக எம்.எஸ்.பாபுராஜின் இசையமைப்பில் வெற்றிப் பாடல்களைப் பாடினார். அவர் தமிழ் திரையிசையில் “பொம்மை”திரைப்படத்தில் முதன்முதலில் வீணை எஸ். பாலச்சந்தர் இசையில் பாடினார். ஆனால் முதன்முதலாக வெளியிடப்பட்ட திரைப்படம் வேதாவின் இசையில் “கொஞ்சும் குமாரி” ஆகும். 1965 ல் மீண்டும் பல்வேறு நகரங்களிலும் இசை கச்சேரிகளில் செய்ய சோவியத் ஒன்றியம் அரசாங்கம் அழைக்கப்பட்டார். சோவியத் மேலும் வானொலி கஜகஸ்தான் மீது ஒரு ரஷ்யன் பாடல் பாடினார். சலீல், யேசுதாஸ் மற்றும் பிரேம் நசீர்ஆகிய மூவரும் 1970 களின் மலையாள சினிமா துறையில் நுழைந்தனர்.1970 ஆம் ஆண்டில் கேரள சங்கீதா நாடக அக்கடமியின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டார், மேலும் இந்த பதவியை வகித்த இளைய நபர் இவராவார்.தென்னிந்திய திரைப்படங்களில் ஒரு தசாப்த பாடலுக்குப் பிறகு, 1970 களின் முற்பகுதியில் ஜேசுதாஸுக்கு ஹிந்தித் திரையிசையில் வாய்ப்புக் கிடைத்தது. இவர் பாடிய முதல் இந்தி பாடல் ஜெய் ஜவன் ஜெய் கிசான் (1971) திரைப்படத்தில் பாடினார். ஆனால் முதலில் வெளியான திரைப்படம் சோதி சி பாத் ஆகும், இதன் விளைவாக இவர் “ஜானேமன் ஜானேமன்” போன்ற பாடல்களுக்காக பிரபலமடைந்தார். அமிதாப்பச்சன் , அமோல் பலேகர், ஜிந்தேந்திரா உள்ளிட்ட பல ஹிந்தித் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்காக ஹிந்திப் பாடல்களைப் பாடியுள்ளார். ரவீந்திர ஜெயின், பொப்பி லஹிரி, கயாம், ராஜ்கமல், சலீல் சவுத்ரி உள்ளிட்ட இசை இயக்குனர்களுக்காக பல பசுமையான ஹிந்தித் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.ஜேசுதாஸின் மிகவும் பிரபலமான ஹிந்தி பாடல்கள் 1976 ஆம் ஆண்டு சிட்சோர் திரைப்படத்தில் , ரவீந்திர ஜெயின் இசையுடன் பாடியது.1999 நவம்பர் 14 அன்று பெரீஸில் நடந்த “அமைதிக்கான இசை” நிகழ்வில் “இசை மற்றும் அமைதிக்கான சிறந்த சாதனைகள்” என்பதற்காக யுனெஸ்கோவால் கௌரவ விருது வழங்கப்பட்டது. இது புதிய மில்லினியத்தின் விடியலைக் குறிக்கும் ஒரு நிகழ்ச்சியாகும், இதில் பல நாட்டு கலைஞர்களும் கலந்து கொண்டனர். லியோனல் ரிச்சி , ரே சார்லஸ் , மொன்செராட் கபாலே மற்றும் ஜூபின் மேத்தா போன்றவர்கள் இதில் அடங்குவர்.2001 ஆம் ஆண்டில் எல்பத்திற்காக பாடினார், அஹிம்சா சமஸ்கிருதம் , லத்தீன் மற்றும் ஆங்கிலம் உட்பட பாணிகள் ஒரு கலப்பில் புதுயுக மற்றும் கர்நாடக. மத்திய கிழக்கில் அவரது இசை நிகழ்ச்சிகளில் அவர் கர்நாடக பாணியில் அரபு பாடல்களைப் பாடுகிறார் . இந்திய இசையை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாடுகளில் தனது நிகழ்ச்சிகளின் மூலம் இந்தியாவின் கலாச்சார தூதராக அடிக்கடி பணியாற்றுகிறார்.பாடும் நிலவு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இறப்பதற்கு ஆறாண்டுகளுக்கு முன் ஜேசுதாஸுக்கு ஒரு மேடையில் பாதபூஜை செய்து பெரும் கௌரவம் ஆற்றினார்.2009 ஆம் ஆண்டில், ஜேசுதாஸ் திருவனந்தபுரத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு இசை பிரச்சாரத்தைத் தொடங்கினார், ‘அமைதிக்கான இசை’ என்ற குறிக்கோளுடன். ‘சாந்தி சங்கீத யாத்திரை’ தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஹேமந்த் கர்காரேவின் மனைவி கவிதா கர்கரே, ஜேசுதாஸுக்கு ஒரு விளக்கு ஜோதியை ஒப்படைத்தார். சூர்ய கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்த 36 வயதான சூரிய இசை விழாவில் யேசுதாஸ் 36 முறை நிகழ்த்தியுள்ளார்.இலங்கைக்கும் பல தடவைகள் விஜயம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடாத்தியவர் கே.ஜே.ஜேசுதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாடிய “ஹரிவராசனம்”ஸ்ரீ ஐயப்பன் பாடல் பக்தி ரசம் மிக்கது. ஸ்ரீ ஐயப்பன் சந்நிதியில் இப்பாடல் ஒலிக்காத நாட்களே கிடையாது. “அன்னை கலைவாணியின் அபூர்வ படைப்புகளில் ஒன்று,பல அபூர்வ ராகங்களை இவ்வகிலத்திற்கே அளித்த “கான கந்தர்வன்”திரு.கே.ஜே.ஜேசுதாஸ் அவர்கள்.இலங்கை ரசிகர்கள் சார்பாக எமது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நல்வாழ்த்துகள்” ஆக்கம் :எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை .