ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர், வீடியோகான் கடன் வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐ) கைது செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்றக் காவலில் இருந்து இடைக்கால விடுதலை செய்து மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
