நீதி வேண்டி மனு..
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா இரும்பாநாடு மேலப்பாகத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தில் 30 குடும்பங்கள் மட்டுமே சேர்ந்து கட்டிய கோவிலில் பிரச்சனை நிகழ்வதாக கூறப்படுகிறது. 4வருடங்கள் ஆகியும் இன்னும் பிரச்சனை தீர்வுக்கு வரவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். தற்பொழுது 17 குடும்பங்கள் மட்டுமே கோவிலுக்கு சென்று வழிபடுவதாகவும்.. 13 குடும்பங்கள் கோவிலுக்கு செல்ல முடியாமலும் இருந்து வருகின்றனர். இதனால் குளம் ,சுடுகாடு என அனைத்திலும் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக அந்த ஊரில் வசிக்கும் 13 குடும்பங்களும் தெரிவித்து வருகின்றனர்.. தங்களுக்கு நீதி வேண்டி பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று முறையிட்டு வருகின்றன.
இந்த பிரச்சனைக்கு தமிழக அரசாங்கம் மற்றும் அரசு அதிகாரிகள் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென்று தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்…