ரிஷி கபூரின் படைப்புகள்…

திரைப்படங்களைத் தயாரிப்பதிலும் இயக்குவதிலும் கவனம் செலுத்தலானார். பாபி (1973) என்னும் திரைப்படத்தை தயாரித்து இயக்கி ரிஷி கபூர் என்னும் தனது இரண்டாவது மகனின் தொழில் வாழ்க்கையைத் துவக்கி வைத்தார். இது மிகப் பெரிய வெற்றி அடைந்தது மட்டும் அல்லாமல் பின்னாளில் மிகவும் பிரபல நடிகையாக விளங்கிய டிம்பிள் கபாடியா இதில்தான் அறிமுகமானார். மேலும், பதின்வயதினர் காதலைச் சித்தரித்த புதிய தலைமுறைக்கான முதல் படமாகவும் இது விளங்கியது. இந்தப் படத்தில் டிம்பிள் அணிந்த மிகக் குறுகலான நீச்சலுடை அந்த நாளைய இந்தியத் திரைப்படங்களில் மிகவும் தனித்தன்மையுடன் விளங்கியது.
1970களின் பிற்பகுதிகளிலும் 1980களின் முற்பகுதிகளிலும் பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட பல திரைப்படங்களை அவர் தயாரித்து இயக்கினார்: ஜீனத் அமன் நடித்த சத்யம் ஷிவம் சுந்தரம் (1978), பத்மினி கோலாபுரெ நடித்த பிரேம் ரோக் (1982), மற்றும் மந்தாகினி அறிமுகமான ராம் தேரி கங்கா மைலி (1985).
ராஜ் கபூர் முக்கியமான ஒரு வேடத்தில் கடைசியாகத் தோன்றியது வக்கீல் பாபு (1982) என்னும் திரைப்படத்தில்தான். கிம் என்று பெயரிடப்பட்டு 1984வது ஆண்டு வெளியான பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்காகவே தயாரிக்கப்பட்ட ஒரு படத்தில் அவர் கௌரவ வேடம் ஏற்றிருந்தார். இதுவே இவர் இறுதியாக நடித்த வேடம்.

மரணம்தொகு

தனது இறுதி ஆண்டுகளில் ராஜ் கபூர் ஆஸ்த்மா நோயால் அவதியுற்றார்; ஆஸ்த்மா தொடர்பான சிக்கல்களால் அவர் 1988வது வருடம் தனது அறுபத்து மூன்றாவது வயதிலேயே மரணமடைந்தார். அவர் இறக்கும்போது ஹென்னா (ஒரு இந்திய-பாகிஸ்தானி காதல் கதை) என்ற ஒரு திரைப்படம் தொடர்பாகப் பணி புரிந்து கொண்டிருந்தார். பிறகு இந்தத் திரைப்படம் அவரது மகன் ரந்தீர் கபூரால் முடிக்கப்பட்டு 1991வது வருடம் திரையிடப்பட்டு மிகப் பெரும் வெற்றியடைந்தது.

செய்தி கணேஷ் ஆச்சாரி இலங்கை

Leave a Reply

Your email address will not be published.