மணப்பாறையில் 2,750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடத்திச் செல்லபட்ட 2,750 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், மணப்பாறை வட்ட வழங்கல் ஆய்வாளர் மணிமாறன் குளித்தலை சாலை கலிங்கபட்டி பிரிவு அருகே சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார் அப்போது அந்த வழியே வந்த சந்தேகத்திற்கு இடமான சரக்கு வேனை நிறுத்தினர், அதிகாரிகளை கண்டதும் வேனில் இருந்தவர்கள் தப்பி சென்றனர், இதுகுறித்து தகவலறிந்து வந்த திருச்சி குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுதுறை ஆய்வாளர் கோபிநாத், உதவி ஆய்வாளர் கண்ணதாசன், மணப்பாறை வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஆகியோர் சரக்கு வேனை சோதனை செய்தனர், அதில் சுமார் 55 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 2,750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததும் , தப்பியோடியது தொப்பம்பட்டியை சேர்ந்த முருகன் மகன் பாரதி (45) என்பதும் தெரிய வந்தது, அதனை தொடர்ந்து போலீஸார் ரேசன் அரிசியையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்,P.பாலு மணப்பாறை செய்தியாளர்,