பாலியல் கொடுமைகளில் இருந்து எப்போது பாதுகாப்பு கிடைக்கும்? குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க எதிர்பார்ப்பு
கோவை : மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியும், பள்ளி அளவிலான, குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கும் பணிகள், கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது பள்ளி மாணவர்களுக்கு எதிராக நடக்கும், வன்முறை சம்பவங்கள், பெரும்பாலும் புகாராக, பதிவாவதே இல்லை. சில புகார்கள் வெளிவரும்போது, சம்மந்தப்பட்ட மாணவர்கள், தற்கொலை உள்ளிட்ட விபரீத முடிவுகள் எடுக்கின்றனர்.இதை தடுக்கவும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டுமென, மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்தாண்டே வலியுறுத்தியதுஇதுசார்ந்து, சமூக பாதுகாப்பு துறையுடன் இணைந்து, பள்ளிகளில் என்னென்ன விழிப்புணர்வு முன்னேற்பாடுகள் செய்யலாம் என்ற திட்ட அறிக்கை தயார்படுத்தப்பட்டதுபள்ளிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால், தற்போது வரை, பாதுகாப்பு குழு அமைப்பதற்கான, எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.இதுகுறித்து, கல்வியாளர்கள் சிலர் கூறுகையில், ‘பள்ளிகளில் பதிவான பாலியல் புகார்களில் பெரும்பாலானவை, ஆரம்பக்கட்டத்திலே வெளிச்சத்திற்கு வந்தவையல்ல. மாணவர்கள் விபரீத முடிவு எடுத்த பிறகே, பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது.புத்தகங்களிலோ அல்லது பேனராகவோ, சைல்டு லைன் எண்ணை அச்சிடுவதால் மட்டும், விழிப்புணர்வு ஏற்படாது. பாதுகாப்பு குழு அமைத்து, மாதந்தோறும் மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர்கள், சமூக செயற்பாட்டாளர்களை கொண்டு, கருத்தரங்கு நடத்தி, மாணவர்களுக்கு பாலியல் அத்துமீறல் என்றால் என்ன என்பதை, விளக்க வேண்டும்.மனரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், வயதுக்கேற்ப ஏற்படும் மாற்றங்களை, கலந்துரையாட வேண்டும். இதற்கு பிரத்யேக பாதுகாப்பு குழு அமைத்து, மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்களை வெளியிட வேண்டும்’ என்றனர். தமிழ் மலர் செய்தியாளர் வேல்முருகன்.