ஐகோர்ட் மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்
தற்போதுள்ள மாடர்ன் உலகில் பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர். இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் சோப்தார் பணியில் முதல் முறையாக லலிதா என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.நீதிபதியுடன் செங்கோல் ஏந்தி செல்லும் சோப்தார் பணியில் மதுரை ஐகோர்ட்டை பொறுத்தவரை ஆண்கள் மட்டுமே இருந்து வந்தனர். தற்போது அந்த பணியில் நியமிக்கப்பட்டுள்ள லலிதாவை பலரும் வாழ்த்தி வருகின்றனர்செய்தி என்.சுதாகர்