ஜெர்மனி வாழ் தமிழர்களுடன் தமிழக அமைச்சர் பங்கேற்பு.
ஜெர்மனிக்கு மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு வருகை டாக்டர் சுகந்தி ரவீந்தரநாத் அவர்களுக்கு பாராட்டு ஜெர்மனியில் தமிழ் கலை பண்பாடு மற்றும் தொழில்துறை வளர்ச்சி பற்றிய கருத்து கலந்தாய்வு கூட்டம் சென்ற வாரம் நடைபெற்றது இந்நிகழ்வில் ஜெர்மனி வாழ் தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் மேலும் தமிழ்நாட்டின் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தமிழ் மற்றும் கலை பண்பாடு வளர்ச்சி மேம்பாடு மற்றும் செயல்திட்டங்கள் பற்றிய கருத்துக்கள் அவரால் பகிரப்பட்டன இந்நிகழ்வில் 20 ஆண்டுகள் ஜெர்மன் தமிழ்ச் சங்கம் மற்றும் நாட்டிய நூண்கலைக்கூடம் நடத்தி தமிழ் கலை பண்பாட்டு வளர்ச்சி பெற வைத்த காரணத்தினாலும் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் சென்னை மாவட்ட ஆட்சியர் திரு சந்திரமோகன் ஐஏஎஸ் அவர்களும் இணைந்து தமிழக அரசின் சார்பில் தமிழ் நாட்டின் செல்வங்கள் என்ற மாண்புமிகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்ட நூலினை வழங்கி டாக்டர் சுகந்தி ரவிந்திரநாத் அவர்களின் தமிழ் கலைச்சேவையை பாராட்டி கௌரவித்தனர் உலகம் முழுவதும் தனது கலைகளைப் பரப்பி வரும் டாக்டர் சுகந்தி ரவீந்திரநாத் அவர்களின் சேவை பாராட்டிற்கு உரியது .
செய்தி செல்வராஜ் திருப்பூர்..