முப்பெரும் விழா…
பெரும்பாக்கத்தில் முப்பெரும் விழா
பெரும்பாக்கத்தில் அறம் 6 வது பிளாக் 8 அடுக்குமாடி குடியிருப்போர் பொதுநலச்சங்கத்தின் 3ஆம் ஆண்டு விழா, அறம் சங்க அலுவலகம் திறப்பு விழா மற்றும் அறம் கனிணி பயிற்சி துவக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகு¬¬திக்கு உட்பட்ட பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் அறம் 6 வது பிளாக் 8 அடுக்குமாடி குடியிருப்போர் பொதுநலச்சங்கத்தின் 3ஆம் ஆண்டு விழா, அறம் சங்க அலுவலகம் திறப்பு விழா மற்றும் அறம் கனிணி பயிற்சி துவக்க விழா என முப்பெரும் விழாவிற்கு தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிர்வாக பொறியாளர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். மேலும் விழாவிற்கு தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் திட்ட ஒருங்கிணைப்பாளர் டார்வின் மோசஸ் அவர்கள் முன்னிலை வகித்தார். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தாம்பரம் காவல் ஆணையரகம் பள்ளிக்கரணை மாவட்டம் காவல் துணை ஆணையாளர் ஜோஸ் தங்கையா, காவல் உதவி ஆணையாளர் ரியாசுதீன், டி17 காவல் நிலையம் காவல் ஆய்வாளர் நடராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அலுவலகம் மற்றும் கணிணி பயிற்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.¬ விழாவில் வர்ணம் மீடியாஸ் கலைப்பட்டறை சார்பில் தப்பாட்டம் மற்றும் சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து சங்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் சங்க உறுப்பினர்கள் மற்றும் அறம் பாடசாலை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் காவல் உதவி ஆய்வாளர் தயாளன், சமுதாய வளர்ச்சி பிரிவு அலுவலர்கள் செங்கல்பட்டு மாவட்ட வாழ்விட மேம்பாட்டு குழு உறுப்பினர் தமிழரசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். செய்தி குமார்