குரங்குகள் அட்டகாசம்…

நடுநடுங்கிய செங்கல்பட்டு.. ஒரே கூண்டில் சிக்கிய 70 குரங்குகளுக்கு சித்ரவதையா.. என்னாச்சு?
செங்கல்பட்டு: வாட்ஸ்அப் குரூப்களில், 70-க்கும் மேற்பட்ட குரங்குகள் சித்ரவதை செய்யப்படுவதாக இரவோடு இரவாக பரவிய தகவல்களுக்கு, தற்போது விளக்கம் தரப்பட்டுஉள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் குரங்குகள் அட்டகாசம் பெருகி வருகிறது.. இந்த குரங்குகள் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாக புகார்கள் எழுந்தன.

தெருக்களில் ஹாயாக சுற்றித் திரியும் இந்த குரங்குகள் தினமும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் செல்லும் பொதுமக்களை துரத்துவதாகவும், இதனால் குழந்தைகள் பயந்து அலறி அடித்து ஓடுவதாகவும் கூறப்படுகின்றன.
அச்சரப்பாக்கம்
மக்கள் வெளியே நிம்மதியாக செல்ல முடியவில்லை என்பதுடன், இந்த குரங்குகளுக்கு பயந்து குழந்தைகளும் தெருவில் விளையாட பயப்படுவதாகவும் கூறப்பட்டன.. அதனால், பொதுமக்களை பலவகைகளில் அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பேரூராட்சிக்கும், வனத்துறைக்கும் புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அந்த புகார்களின் அடிப்படையில், பேரூராட்சி நிர்வாகமும், அச்சரப்பாக்கம் கோட்ட வனத்துறையும் இணைந்து நடவடிக்கைகளில் இறங்கின.
பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் காந்தி நகர், நேரு நகர், கஸ்தூரி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கூண்டுகளை வைத்து, குரங்குகளை பிடித்தனர்.. முதல் நாள் 3 கூண்டுகள் வைக்கப்பட்டதில், ஒரு கூண்டிலும் எந்த குரங்கும் சிக்கவில்லை… 2வது கூண்டில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகளும், 3-வது கூண்டில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகளும் வந்து சிக்கின.. 2-வது நாள் மொத்தமாக 26 குரங்குகள் பிடிபட்டன… மொத்தமாக 70-க்கும் மேற்பட்ட குரங்குகள் சிக்கின.
ஆனால், ஒரே கூண்டில் 70-க்கும் அதிகமான குரங்குகளை வனத்துறையினர் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும், இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவின.. குரங்குகளின் போட்டோவும் இரவு நேரத்தில் வேக வேகமாக வாட்ஸ்அப் குழுக்களில் பரவியது.. இதை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ந்துவிட்டன.. இதையடுத்து, 3 கூண்டுகள் வைத்தும் ஒரு கூண்டில் எந்த குரங்குகளும் சிக்காததும், ஒரே கூண்டில் 40-க்கும் மேற்பட்ட குரங்குகள் சிக்கி உள்ளதே எப்படி என்று கேள்வி எழுப்பி உள்ளனர்
தமிழ்மலர் செய்தியாளர் வேல்முருகன்.

Leave a Reply

Your email address will not be published.