இந்திய தேசத்தின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா..

இந்திய தேசத்தின்
75 ஆம் சுதந்திர தின விழாவை
நாடெங்கிலும் கோலாகலமாக பொதுமக்களும்,
அரசு அலுவலகங்களும், தனியார் பள்ளி ,கல்லூரி, தொழிற்சாலைகள் மிகுந்த ஆர்வத்தோடு உற்சாகத்தோடு பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்

இந்த இனிய நேரத்தில் இந்த சுதந்திரத்தை பெற்றுத்தர
பாடுபட்ட உத்தமர்கள் ,
பெருந்தலைவர்கள் அந்த காலத்தில்
எந்த விதமான
தொழில்நுட்ப வளர்ச்சியோ, அறிவியல் ,
விஞ்ஞான வளர்ச்சியோ ,
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியோ, இல்லாத காலத்தில் எவ்வாறெல்லாம் போராடி இருப்பார்கள்
எப்படி எல்லாம் போராட்டம் நடத்தி இருப்பார்கள்

எவ்வளவு இன்னல்களை தாங்கிக் கொண்டு தங்களுடைய இன் உயிரை இந்த தேசத்தின் நலனுக்காக அர்ப்பணித்து இருப்பார்கள் என்பதை நினைக்கும் பொழுது

அந்த தியாகிகளை, போராட்ட வீரர்களை, பெருமை வாய்ந்த தலைவர்களை, நினைவு கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் இருக்கிறது

இன்றைய இந்திய தேசம் அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞான அறிவு, பொருளாதார தன்னிறைவு, விவசாய உற்பத்தியில் பல்வேறு சாதனைகள் அடைந்துள்ள நிலையில்

இவைகளுக்காக உழைத்துக் கொண்டு இருக்கின்ற தொழிலாளிகள், பாட்டாளிகள், இவருடைய உழைப்பை மதித்து பாராட்ட வேண்டிய கட்டாயமும், அவசியமும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இருக்கிறது

அதே வேளையில் நிறவெறியால் நம்மையெல்லாம் அடிமையாக்கி
அடக்கி, ஒடுக்கி, தன்னுடைய ஆதிக்கத்தின்
கீழ் இந்த தேசத்தை வைத்திருந்த அன்னிய ஏகாதிபத்தியம்

அவர்களுடைய வருகையும் ஏதோ ஒரு வகையில் புதிய தொழில்நுட்பங்களையும் பள்ளிக்கல்வி நிலையங்களை ஆங்காங்கே உருவாக்கப்பட்டதன் விளைவாக

இந்த மாபெரும் வளர்ச்சியை ,
சாதனையை, இந்த தேசம் பெற்றுள்ளது ஒரு மறுக்க முடியாத மறக்க முடியாத பொதுவான உண்மை

அந்த வகையில் அவர்களுக்கும்
நாம் நன்றி கடன் பட்டிருக்கிறோம்

அனைத்து நிலைகளிலும்
பிற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது
நமது தேசம் இலக்கியம், பண்பாடு பொழுதுபோக்கு, விளையாட்டு, கல்வி, சுற்றுலா, தொழில், பலதரப்பட்ட தொழில் வளர்ச்சி, இந்திய பொருளாதார மேம்பாடு போன்ற வகையில் மட்டுமல்லாமல் அரசியல் ஆன்மீகம், பண்பாட்டு ,பழக்க வழக்கங்களில் மற்ற நாட்டவரை மிஞ்சுகின்ற அளவில் நமது தேசம் வளர்ந்துள்ளது என்பது
நம் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது

பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை போற்றி பாதுகாக்க வேண்டிய
கடமை
வருங்கால இளைஞர்கள்
வசம் உள்ளது

இன்றைய இளைஞர்கள் தான் வருங்காலத்தில் இந்த தேசத்தின் சொத்துக்கள்

அவர்கள் இந்த தேசத்தின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு தன்னையும்
தன் குடும்பத்தையும் பாதுகாப்பது மட்டுமில்லாமல்
தேசத்தின் நலனில்
அக்கறை கொண்டு வருங்காலத்தில் ஒரு தூய்மையான நிர்வாகத்தை அரசியலமைப்பை தீர்மானிக்கின்ற ஒரு மாபெரும் காரணியாக உருவெடுக்க வேண்டும்

இன்று நமது சமூகத்தில் இருக்கின்ற சீர்கேடுகளான லஞ்சம்,
லாவண்யம், சுயநலம் , சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், போன்ற அனைத்து நிலைகளிலும்
இந்த தேசத்தின் முதுகெலும்பாக இருந்து வருங்காலத்தில் சமதர்ம சமுதாயத்தை
உயர்வு தாழ்வற்ற நிலையை உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இன்றைய இளைஞர்களுக்கு உண்டு

இவர்கள்தான் இந்த தேசத்தின் வருங்கால தலைவர்கள்

இவர்கள்தான் இந்த தேசத்தின் சொத்து

எனவே இன்றைய இளைஞர்கள் அனைவரும் இந்த 75 வது தின சுதந்திர தின விழாவில் கொண்டாடி மகிழுவது மட்டுமல்லாமல் வருங்காலத்தில் நாமெல்லாம்
எப்படி இருக்க வேண்டும் என்ற பண்பாட்டு பழக்க வழக்கங்களையும்

நம்முடைய மகான்களின் கருத்துக்களை ஏற்று
எந்த ஒரு தனி மனிதனுக்கும் துன்பம் விளைவிக்காமல்
தங்கள் நலன் ,குடும்ப நலன், சமூக நலன் மற்றும் தேசத்தின் வளர்ச்சி

இவற்றில் தன்னுடைய சிந்தனை, தங்களுடைய செயல்பாடுகள், தங்களுடைய குறிக்கோள்களை
இலக்காக தீர்மானித்து*

மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ வேண்டிய கட்டாயம் அனைத்து இளைஞர்களுக்கும் இருக்கிறது

தற்பொழுது இருப்பவர்களை குறை சொல்லிக் கொண்டு

தாங்கள் அந்த நிலைப்பாடுகளுக்கு தள்ளப்படாமல்
வருங்கால வாழ்வுக்கான திட்டங்களை உருவாக்கி இந்த தேசத்தினுடைய புனிதத்தையும் ,இந்த தேசத்தினுடைய இறையாண்மையும், காக்க கடமைப்பட்டுள்ளனர்.

இது போன்று ஒவ்வொரு தனி மனிதனும்
உணர்ந்து வருங்கால தேவைகளை சரியான முறையில் திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ளும் பொழுது அனைத்து நிலைகளிலும் இந்திய தேசம் மிகப் பெரும் வளர்ச்சியை அடையும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இடமில்லை.

இளைஞர்களே கனவு காணுங்கள்

இந்த தேசம் உங்கள் கையில் உள்ளது

அதனுடைய வளர்ச்சியும் மேன்மையும் ஒவ்வொரு இந்திய இளைஞர்களுடைய வளர்ச்சியில் இருக்கிறது

என்று ஒவ்வொரு கூட்டங்களிலும் தன்னுடைய இன் உயிரை பிரிகின்ற நேரம் வரை ஒவ்வொரு மேடைகளிலும் சொல்லி வந்த நம்முடைய தேசத்தின் பார் போற்றும் ஒப்பற்ற தலைவர் மறைந்த மாமேதை அணு விஞ்ஞானி , முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்
அவர்கள் கண்ட கனவும் நினைவாகும்

மாமனிதர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் வழியில் நின்று இந்த தேசத்தை வளர்ப்போம்

அவர்களை முன் உதாரணமாகக் கொண்டு எளிய வாழ்க்கை, உயர்ந்த லட்சியம், பிறர் நலனே தன் வாழ்க்கையில் லட்சியமாக கொண்டு வருங்கால நவபாரதத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களை சார்ந்தது

மேற்கண்ட நல்ல அரிய தகவல்களை முறையாக பயன்படுத்தி வருங்கால சந்ததிகளையும் வழிநடத்தி இந்த தேசத்தை காப்போம் என்ற உறுதி மொழியை ஏற்பது மட்டுமே

நாம் இந்த சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்த இனிய நேரத்தில் உறுதி மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று

மேலும் பெரும் பாடுபட்ட தியாகிகளுக்கு, போராட்ட வீரர்களுக்கு, அரும்பாடு பட்ட தலைவர்களுக்கு நாம் செலுத்தும் காணிக்கையாக

நன்றி உணர்வோடு தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்வோம்

வாழ்க இந்தியா
வளர்க இந்தியா

இளைஞர்களுடைய ஒற்றுமை ஓங்குக

இளைஞருடைய *தன்னம்பிக்கையும் வளர்ச்சியும் பெருகட்டும்

தாயின் மணிக்கொடி செம்மாந்து பட்டொலி வீசட்டும்

செய்தி
*லயன் வெங்கடேசன், M.A., தலைவர் செங்கல்பட்டு மாவட்டம் *தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன்*

Leave a Reply

Your email address will not be published.