செஸ் போட்டி..
செஸ் போட்டி நினைவுப் பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்:
மாமல்லபுரம், சர்வதேச செஸ் போட்டி கண்காட்சியில், நினைவு பொருட்கள் வாங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. சர்வதேச வீரர்கள் விளையாடுகின்றனர். இதற்காக, நடுவர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோரும் வந்துள்ளனர். பார்வையாளர்கள் போட்டியை பார்வையிடுகின்றனர்.போட்டி நடக்கும் ‘போர் பாயின்ட்ஸ்’ விடுதியில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில், கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இங்குள்ள அரங்கங்களில், செஸ் பயிற்சி நிறுவனங்கள், நவீன செஸ் பலகைகள், செஸ் காய்களுடன் சாவி கொத்து, பயிற்சி புத்தகங்கள், இப்போட்டி சின்னம் இடம்பெற்ற டி – ஷர்ட் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தி உள்ளன.வீரர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர், இவற்றை ஆர்வத்துடன் கண்டு, சர்வதேச போட்டி நினைவாக பொருட்கள் வாங்கி, விற்பனை களைகட்டுகிறது.
செய்தி வேல்முருகன் திருக்கழுக்குன்றம்