இந்திய அளவில் மீண்டும் கொரோனா..
இந்தியாவில் ஒரே நாளில் 19,893 பேருக்கு கொரோனா… 53 பேர் பலி : ஒன்றிய சுகாதாரத்துறை அதிர்ச்சி :புதிதாக 19,893 பேர் பாதித்துள்ளனர்.
- இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,87,037 ஆக உயர்ந்தது.
- புதிதாக 53 பேர் இறந்துள்ளனர்.
- இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,530 ஆக உயர்ந்தது.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 20,419 பேர் குணமடைந்துள்ளனர்.
- இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,34,24,029 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.50% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது.
- சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.31% ஆக குறைந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,36,478 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*இந்தியாவில் 2,05,22,51,408 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 38,20,676 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர் வேல்முருகன்