ஈஷா யோகா மையத்தில் இளைஞர் தற்கொலை

கோவை ஈஷா யோகா மையத்தில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டத்தை சேர்ந்த ரமணா என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

22/07/2022
கோவை மாவட்டத்தில், ஆன்மிக தளமாகவும், யோகா பயிற்சி மையமாகவும் இயங்கி வரக்கூடிய ஈஷா மையத்தில், ஆந்திரா, விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ரமணா என்ற 28 வயது இளைஞர் வந்துள்ளார்.
மன அழுத்தத்தில் இளைஞர் ரமணா தற்கொலை செய்துகொண்டார் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த ரமணாவின் உடலை கைப்பற்றிய ஆலந்துறை போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும், ரமணாவின் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் மலர்
மின்னிதழ் செய்திகளுக்காக,
T.கார்த்திக் குமார்

Leave a Reply

Your email address will not be published.