காளியம்மன் கோவில் திருவிழா

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கோயில் திருவிழாவை 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா இன்று (ஜூன் 13) நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

அப்போது தேர் வீதியில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து சாய்ந்தது. தொடர்ந்து ஏராளமான மக்கள் கூடி இருந்ததால் தேர் சாய்ந்ததில் 5 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் மனோகரன், சரவணன் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.