இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்..
முதல்வர் பழனிசாமி பெருமிதம்.தமிழகத்தில் வேலையின்மை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அரை சதவீதமாக குறைந்துள்ளது
இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் வெளியிட்டு உள்ள தகவலில்
தேசிய அளவில் நவம்பரில் 6.5 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், டிசம்பரில் 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியதற்கேற்ப வேலையின்மை விகிதம் குறைந்து வந்துள்ளது.
முழுஊரடங்கு அமலில் இருந்த ஏப்ரலில் வேலையின்மை விகிதம் 49.8 சதவீதமாக இருந்து, ஜூலையில் 8.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.செப்டம்பரில் 5 சதவீதமாகவும், அக்டோபரில் 2.2 சதவீதமாகவும், நவம்பரில் 1.1 சதவீதமாகவும் வேலையின்மை விகிதம் குறைந்ததாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மை, தொழில்துறை, சேவைத்துறைகளின் பங்களிப்பு காரணமாக வேலையின்மை விகிதம் குறைந்ததாக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–
அடுக்கடுக்கான தமிழக அரசின் முயற்சிகள், அடுத்தடுத்து மேற்கொள்ளும் முதலீட்டு ஒப்பந்தங்கள், முடுக்கி விடப்பட்ட தொழில்சூழல், செழித்து நிற்கும் விவசாயம் விளைவாக, 5 ஆண்டுகளில் மிகக்குறைந்த வேலையின்மை விகிதம் 0.5 சதவீதம் மக்களின் மகிழ்ச்சியோடு வெற்றிநடைபோடும் தமிழகம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரஹ்மான் செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்