வானளாவிய வெற்றி…
கோவையில் கடந்த ஜூன் 2-ம் தேதி என்றும் ராஜா ராஜாதான் என்று அனைவராலும் போற்றப்படும் இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் தினத்தில் கோவை மக்களை மகிழ்வித்தார் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்…
சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இசைஞானி இளையராஜாவின் இசை மழையில் நனைந்தனர். நிகழ்ச்சி இரவு 7 20 மணிக்கு தொடங்கிய முதல் இந்த உற்சாகம் 12.30 வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.. சுமார் 5 மணி நேரம் தொடர்ந்த இசை மழை…. இளையராஜாவின் இசையை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் எழுந்து செல்ல மனமில்லாமல் கலைந்தனர். மீண்டும் எப்போது இதே மாதிரி நிகழ்ச்சியை காண்போம் என்று மக்கள் மனதில் கனத்த இதயத்துடன் சென்றனர் என்பது உண்மை..
இந்த அற்புதமான நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்த நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு மிகப்பெரிய சல்யூட்
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் ராஜா ராஜாதான் என்று பல ஆயிரம் பேர் சொல்வதை கேட்க முடிந்தது….
இந்த நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும், ஆசை மீடியா நெட்வொர்க் மற்றும் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக மூத்த பத்திரிகையாளர் சிரஞ்சீவி அனீஸ் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி ராகுல் தமிழ்மலர் மின்னிதழ் சென்னை.