வீடுகட்ட நிதி..
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு அறிவியல் பிரிவில் பயிலும் ரா.காளீஸ்வரி
(த/பெ ராஜேந்திரன் 4/220,கீழக்குடியிருப்பு,ஒக்கூர்) என்ற மாணவியின் வீடு 15 நாட்களுக்கு முன்னர் இடிந்து விட்டது.சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயுடன் வசித்து வரும் ஏழை மாணவிக்கு ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர் பெருமக்கள் உதவியுடன் இன்று (20-04-2022) அவர்கள் இல்லத்திற்கு சென்று ₹20000(ரூபாய் இருபதாயிரம் மட்டும்) வீடுகட்ட நிதி வழங்கப்பட்டது.
இந்நிதியை பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், ஆசிரியர் செயலர் குமார், வகுப்பாசிரியர் செந்தில்குமார், பட்டதாரி ஆசிரியர் செல்வஷாஜி ஆகியோர் பள்ளியின் சார்பாக மாணவி காளீஸ்வரி மற்றும் அவரது தாயாரிடம் வழங்கி தந்த நிகழ்வு….
தமிழ்மலர் செய்திக்காக…புதுக்கோட்டை யிலிருந்து வேலாயுதம்