விரைவில் சிகப்பாகணுமா? இதோ சூப்பர் மாஸ்க்…
பொதுவாக எல்லா பெண்களுக்குமே சிகப்பாக இருக்க வேண்டும் என்றே தான் ஆசை.
இதற்காக நம்மில் பலரும் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிறீம்களை வாங்கி உபயோகிப்பதுண்டு.
அந்தவகையில் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி நீங்கள் நினைக்கும் உடனடி வெண்மையான சருமம் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை பேக்கை பயன்படுத்தினாலே போதும்.
தற்போது அந்த பேக்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பப்பாளி – ஒரு துண்டு (நன்கு மசித்தது)
- எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
- பால் – ஒரு ஸ்பூன்
செய்முறை
எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, ஒரு மென்மையான விழுதாக தயாரித்துக் கொள்ளவும்.
இந்த விழுதை உங்கள் முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் அப்படியே விடவும்.
பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
இது இயற்கையாக ப்ளீச் தன்மைக் கொண்ட பொருட்களாகும். ஆகவே, உடனடி பளபளப்பை சருமத்தில் கொண்டுவர இந்த இரண்டு மூலப்பொருட்களும் மிகச் சிறந்த முறையில் உதவுகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.