முடிந்தது விடுமுறை: இன்று மீண்டும் சட்டசபை!
சட்டசபையில், 6ம் தேதி முதல், துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. இதுவரை, நீர்வளம், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு, உணவு, உயர் கல்வி, பள்ளி கல்வி, நெடுஞ்சாலை, பொதுப்பணி, வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் உள்ளிட்ட துறைகள் மீது விவாதம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என, சட்டசபைக்கு நான்கு நாட்கள்
விடுமுறை அறிவிக்கப்பட்டது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின், இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.