லக்கிம்பூர் சம்பவம்; ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமின் ரத்து!
புதுடில்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதியது. இந்த விபத்தில் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 4 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இது தொடர்பான வழக்கில் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமினை உச்சநீதிமன்றம் இன்று (ஏப்.,18) ரத்து செய்தது. ஜாமின் ரத்து செய்யப்பட்டதால் ஆசிஷ் மிஸ்ரா ஒரு வாரத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.