ஐபிஎல் : ஹைதராபாத் அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா அணி!
இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 25-வது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது .
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும் ,வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர் .பின்னர் வந்த சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் ,நிதிஷ் நிலைத்து நின்று ஆடினர். அணியின் ஸ்கோர் 70 ஆக இருந்தபோது ஷ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா 32 பந்துகளில் அரை சதம் அடித்தார்.தொடர்ந்து விளையாடிய அவர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார் . கடைசி நேரத்தில் ஆண்ட்ரே ரசல் அதிரடி காட்டினார் .அவர் 25 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.