இலங்கையில் ரேஷன் முறையில் பெட்ரோல் – டீசல்!
அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தன. வீடுகளில் பல மணி நேரம் தொடர் மின் வெட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.மறுபுறம் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி, அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏழாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. நாளுக்கு நாள் போராடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.