சென்னையில் தனியார் மயமாகிறது புதிய பஸ் ஸ்டாண்ட்!
சென்னையில் இரண்டு புதிய பஸ் ஸ்டாண்ட்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார்வசம் அரசு ஒப்படைக்க உள்ளது.
சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே 300 கோடி ரூபாயில் மற்றொரு பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது.இதில், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டில் 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அடுத்த ஆண்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த இரண்டு புதிய பஸ் ஸ்டாண்டுகளையும் பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை தனியாரிடம் விட அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.