சென்னை ஐஐடி பேராசிரியர்கள் முன்ஜாமின் மனு!
சென்னை ஐஐடி.,யில் மாணவி பலாத்கார வழக்கில் முன்ஜாமின் கேட்டு அங்கு பணியாற்றும் வேதியியல் பேராசிரியர்கள் எடமான பிரசாத், ரமேஷ் கர்தாஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் முஜ்னாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் மனுவில் கூறியுள்ளதாவது: மாணவி, விடுமுறை நாளில் மாணவர்களுடன் ஒன்றாக பயணித்துள்ளார். 2020ம் ஆண்டில் மாணவி தந்த புகாரில் ஆதாரம் இல்லை. நிர்வாகத்திடம் தந்த புகாரில் பெயர் இல்லாத நிலையில், வழக்கில் எங்களது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த மனு மீது வரும் 18 ல் விசாரணை நடைபெற உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.