ஏப்.,14 இனி சமத்துவ நாள்: முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழக சட்டசபை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அம்பேத்கர், வேண்டாததை நீக்கிய சிற்பி; வேண்டியதை சேர்த்த ஓவியர். அவரின் பிறந்தநாளான ஏப்.,14ம் தேதியை இனி சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்படும். அந்த நாளில் தமிழகம் முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும். அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவ சிலை நிறுவப்படும். அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள், செம்பதிப்பாக தமிழில் மொழி பெயர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.