கானத்தூர் ரெட்டிக்குப்பம் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொடக்கம் :
தமிழக அரசு ஆணையின்படி, தமிழகத்தில் 2021 தைபொங்களுக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500/- மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து இன்று கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதியில், திரு, S. குமரவேல் M.A, திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அவர்கள் வருகை தந்து மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி துவங்கி வைத்தார்.
இதில் கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த திரு, வள்ளி எட்டியப்பன் மற்றும் கழக கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்