தென் ஆப்பிரிக்கா – வங்காளதேச அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்!
வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது .
இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்கா ,கெபெர்ஹாவில் இன்று தொடங்குகிறது .
முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் வங்காளதேச அணி தீவிரம் காட்டும் . அதே நேரத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி களம் காணும்
இந்த போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.