பெங்களூருவில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பெங்களூரு: பெங்களூருவில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாருக்கு கடிதம் வந்துள்ளது. அங்கு விரைந்த போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், தகவல் கிடைத்ததும், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் சென்று சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடத்தினோம். இதுவரை நடந்த சோதனையில் வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த மிரட்டல் புரளியாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.