சைக்கிளும் வரலை…பணமும் போச்சு: ஆன்லைனில் நடந்த ‘திடுக்’ மோசடி!
கோவை ஆர்.எஸ்.புரம் பி.எம்.சாமி காலனியை சேர்ந்த சங்கேஷ் மனைவி லெதிகா, 39. இவர் தன் மகனுக்கு சைக்கிள் வாங்குவதற்காக, இணையதளம் ஒன்றில் தேடினார். குறிப்பிட்ட ஒரு சைக்கிளை தேர்வு செய்தார். அதற்கு முன்பணமாக, 1699 ரூபாய் கட்டுமாறு இணையதளத்தில் தெரிவித்திருந்தனர். அதன்படி 1699 ரூபாயை செலுத்தினார். ஆனால், குறிப்பிட்ட நாட்கள் கடந்தும் சைக்கிள் வரவில்லை.
இணையதளத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணில் அழைத்துப் பேசினர். அப்போது பேசிய வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, செலுத்திய முன்பணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி, லெதிகாவின் ‘கூகுள் பே’ அல்லது ‘போன் பே’ எண் தருமாறு கேட்டு வாங்கிக் கொண்டார். தான் அனுப்பும் மெசேஜில் இருக்கும் ‘லிங்க்’கை கிளிக் செய்ய வேண்டும் என்றும், அதில் வரும் கேள்விக்கு ‘ஆம்’ என்று பதிலளிக்க வேண்டும் என்றும், ஓ.டி.பி., வந்தால் உள்ளீடு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.