மாபெரும் தொல்லியல் பொக்கிஷமான…

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், மொரட்டுபாளையம் ஊராட்சி, செங்கப்பள்ளி ஊராட்சி எல்லையில் சேடர்பாளையம் ( செட்டி பாளையம் பிரிவு) கிராமத்தில் உள்ள 500 ஆண்டுகளுக்கும் மேலான(திப்பு சுல்தான் காலம்’, கிருஷ்ணதேவராயர் காலம் எக்காலத்தை சார்ந்தது என்று கணிக்க முடியாத) மிகப் பழமையான ஆறுகால் சாவடி (தண்ணீர் பந்தல்)என்னும் 6 கல் தூண்களை கொண்ட , அரசுக்கு சொந்தமான, மாபெரும் தொல்லியல் பொக்கிஷமான,மிக பழமையான புராதன காலத்தை சேர்ந்தப மண்டபத்தை…..
சில ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அதன் உண்மை தன்மையை சிதைக்கும் விதமாகவும் ,ஆக்கிரமிக்கும் நோக்கத்துடனும், ஆக்ரமித்து அங்கு அலுவலகம் அமைக்கும் நோக்கத்துடனும் மேற்கொண்ட ஒரு கட்டுமான (கட்டிடம் கட்டி சுற்றுச்சுவர் அமைத்தல்)முயற்சி சேடர்பாளையம் கிராம இளைஞர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது….
ஆனால் அந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் ரகசியமாகவும், துரிதமாகவும் மீண்டும் கட்டுமான முயற்சியை தொடங்கும் நோக்கத்தில் இருக்கிறார்கள்……..
அப்படி தொடங்கினால் அந்த புராதன பொக்கிஷத்தை காப்பாற்றும் விதமாக, அந்த முயற்சியை தடுத்து நிறுத்தும் விதமாகவும்..
அரசு துறைகளின் உதவி தேவைப்படுகிறது……
இது தொடர்பாக யாரை ?எந்த அரசுத் துறையை தொடர்பு கொள்வது ?
என்று தெரியாமல் தவிக்கும் இளைஞர்கள் தமிழ்மலர் மின்னிதழ் திருப்பூர் செய்திக்காக நிருபர் M.அரவிந்த் குமார்

Leave a Reply

Your email address will not be published.