ரத்தத்தை சுத்திகரிக்கும் கரிசலாங்கண்ணி!!
கீரைகளில் பல வகை உள்ளன. ஒவ்வொரு கீரையிலும் தனிப்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் கரிசலாங்கண்ணி கீரை ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி என இரண்டு வகைப்படும் இந்த கீரை கல்லீரல் செயல்பாட்டிற்கு மிகவும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைய அளவில் இருக்கின்றன. இது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. கண் பார்வையை தெளிவுப்படுத்துகிறது. தசைகளை கடுமையாக விரைக்கச் செய்கிறது. வாயு நோய்க்கு சிறந்த மருந்து. உடலுக்கு உரமூட்டுகிறது. மண்ணீரலில் ஏற்படும் வீக்கம் முதலியவைகளை குணப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் வீக்கம் குறையும்.
*இந்தக் கீரையை சாப்பிடுவதாலும், இதன் சாற்றை தலையில் தேய்ப்பதாலும் முடி கருகருவென்று வளரும். 2 சொட்டு சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளி நீர்க்கோவை குணமாகும்.
*நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கரிசலாங்கண்ணி சாரை கலந்து காய்ச்சி தலைவலிக்கு தேய்க்கலாம். வலியுள்ள இடத்தில் தடவினால் வலி நீங்கும்.
*இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலி குறையும். தொப்பை, பருமன் குறையும்.
*இந்தக் கீரையை பயன்படுத்தி செய்யும் கண் மை, கண் நோய்களை தடுக்கும். இதன் சாரை காதில் விட்டால் காது வலி நீங்கும்.
*காமாலை நோய் வந்தால் தினம் காலை ¼ அவுன்ஸ் தொடங்கி மறு நாள் ¼ அவுன்ஸ் வீதம் குறைந்தது 10 நாட்கள் உட்கொள்ள வேண்டும். 20து நாள் வெறும் ¼ அவுன்ஸ் குடிக்க, எந்த விதமான காமாலை நோயும் குணமாகும்.
*கரிசலாங்கண்ணி கீரையை வெயிலில் காயவைத்து பொடி செய்து உபயோகித்து வந்தால் சிறுநீரகக் கோளாறு நீங்கும்.
*கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.
*வெயில் காலத்தில் கரிசலாங்கண்ணியை பருப்புடன் சேர்த்தும் பொரியல் செய்தும், சூப் வைத்தும் அன்றாடம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தையும், பலத்தையும் பெறலாம்.
*கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் ரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் ரத்த சோகை நீங்கி விடும். ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.