புதுச்சேரி – திருப்பதிக்கு மீண்டும் ரயில் இயக்கம்!!
புதுச்சேரி: புதுச்சேரி – திருப்பதி பயணிகள் ரயில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.
புதுச்சேரி – திருப்பதி இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து திருப்பதிக்கு ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயில் நேற்று அதிகாலை திருப்பதியிலிருந்து புறப்பட்டு மதியம் 12:30 மணிக்கு புதுச்சேரிக்கு வந்தடைந்தது. மீண்டும் புதுச்சேரியிலிருந்து பிற்பகல் 2;55 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக திருப்பதிக்கு இரவு 11:00 மணிக்கு சென்றடையும்.
புதுச்சேரி – திருப்பதி ரயில் தற்போது முன்பதிவு இல்லாத விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு ரயில் இயக்கப்பட்டதால் பக்தர்கள் மற்றும் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.