காஸ் சிலிண்டர் வெடித்து கூரை சேதம்!!
கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி அருகே காஸ் சிலிண்டர் வெடித்ததில் கூரை வீடு எரிந்து சேதமானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள குரும்பலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா 30; கூலித் தொழிலாளி. மனைவி ஜெயராணி. இவர்களுக்கு 10 மாத குழந்தை உள்ளது. கூரை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் காஸ் சிலிண்டர் அடுப்பில் குழந்தைக்கு ஜெயராணி பால் காய்ச்சினார். பால் வைத்திருந்ததை மறந்து விட்டு குழந்தை மற்றும் கணவருடன் பக்கத்து வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வீட்டின் கூரையில் தீ பிடித்து எரிந்தது. இதனால் வீட்டிலிருந்த காஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓடி அருகே இருந்த பள்ளிக் கட்டடத்தில் தஞ்சமடைந்தனர்.பின் பொதுமக்கள் தீயை அணைத்தனர். வீட்டிலிருந்த பொருட்கள் முழுதும் எரிந்து சாம்பலானது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.