சாலையில் கிடந்த வெளிநாட்டு பணம்!
சாலையில் கிடந்த வெளிநாட்டு பணம்! உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்!!
சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பலரும் நேர்மையாக செயல்பட்டு, தங்களுக்கு கிடைத்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை, உரியவர்களிடம் ஒப்படைத்த சம்பவங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை அடையாறு மண்டலத்தில் குப்பைகள் சேகரிக்கும் பேட்டரி வாகனத்தை ஓட்டும் 38 வயதான மூர்த்தி என்பவர், சில தினங்களுக்கு முன் வழக்கம்போல பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது சாலையில் வெளிநாட்டு பணத்துடன் கிடந்த பெட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளார். உடனடியாக தனது மேற்பார்வையாளர் செல்வத்தை அழைத்து விவரத்தை கூறியுள்ளார்.
அந்த பெட்டி மயிலாப்பூர் அருண்டேல் தெருவில் வசிக்கும் மேரி சித்ராவுக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்