‘நாக்’ தேசிய தர மதிப்பீடு: சென்னை பல்கலைக்கு சிக்கல்?!!
சென்னை: நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சென்னை பல்கலைக்கு, தேசிய தர மதிப்பீடு, ‘நாக்’ அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து, பல்கலை நிர்வாகிகள், தமிழக உயர்கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர்.
நாடு முழுதும் செயல்படும் கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், மத்திய அரசின் யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் அங்கீகாரம் பெற வேண்டும்.அதனுடன் சேர்த்து, மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும், தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் ‘நாக்’ அந்தஸ்து சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.