மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்!!!
கொடைக்கானல். ஏப்ரல்1/4/2022, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் கொடைக்கானல் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. கொடைக்கானலில் இன்று மாற்று திறனாளிகள் மாணவ மாணவிகளுக்கு இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்று நடைபெற்றது இதில் கொடைக்கானலை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும் கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் நிறைய மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர் இதில் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு மற்றும் இலவச பஸ் பாஸ்கள் ரயில்வே பார்சல் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது இதில் சிறப்பாக கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பாக அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது கொடைக்கானல் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவர் வரவழைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் குறைபாடுகளை மதிப்பீடு செய்து தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது இதில் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திலிருந்து உயர் அதிகாரியின் மேற்பார்வையில் இவை அனைத்தும் சிறப்பாக கொடைக்கானல் அரசினர் பள்ளியில் நடைபெற்றது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.